Thursday, 2 February 2012

விநாயகர் வசிய மந்திரம் MP3 கோப்பாக

விநாயகர் வசிய மந்திரம் MP3  கோப்பாக 

தரவிறக்க விநாயகர் வசிய மந்திரம் .mp3            



ஓம்-ஸ்ரீம்-ஹ்ரீம்-க்லீம்-க்லௌம்-கங், கணபதியே
வரவரத, ஸர்வஜனம்மே வசமானய ஸ்வாஹா!


மங்கலத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா
பொங்குதள வயிற்றானே பொற்புடைய ரத்தின்னே
சங்கரனார் தருமதலாய் சங்கடத்தைச் சங்கரிக்கு
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!
அப்பமுடன் பொறிகடலை அவலுடனே அருங்கதலி
ஒப்பில்லா மோதகமும் ஒருமனதாய் ஒப்பித்து
எப்பொழுதும் வணங்கிடுவேன்; எனையாள வேண்டுமென
அப்பனுக்கு முந்திவரும் அருட்கணியே கணபதியே
பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்கு உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தை உமக்காக்கி
தெள்ளியனாய்த் தெளிவதற்கு தென்தமிழில் போற்றுகிறேன்
உள்ளியதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!
இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியெனப் போற்றுகிறேன்

0 comments:

Post a Comment