SHIRDI LIVE DARSHAN

Friday 24 February 2012

ஸத்ய சாயி கவசம்


ஸத்ய சாயி கவசம்

ஊழ்வினையும் தொடர்வரு பழவினனயும் ஸாயி நாமம் சொல்லப் பறந்திடுமே, பர்த்தி ஸாயி காக்க என்று படிப்போர்க்குக் கிடைக்கும் இகபர இனபமே.


தாயாகத் தன்னகத்தே ஈர்க்கும் ஸ்ரீ ஸாயிராம்
சேயன் தன் அறிவு மிளிர சிரமதைக்காக்க
ஓங்காரத்தில் வாழ் ஆனந்த ரூபி ஸ்ரீ ஸாயிராம்
ஒருமையாம் மனதில் அமர்ந்து நெற்றியினைக் காக்க
எம்மதமும் சம்மதித்திடும் ஸ்ரீ ஸாயிராம்
செம்மை சேர் வதனமதைச் சீருடன் காக்க
கீதமழை பொழிந்த ஆழிமழைக் கண்ணன் ஸ்ரீ ஸாயிராம்
தீது நோக்கா திசைவிளக்கென இரு கண்ணினைக் காக்க
அலை போன்று அடங்காது செயலுறும் ஸ்ரீ ஸாயிரரம்
புல்லறிவைப் புனிதபடுத்தி இரு புருவமதைக் காக்க
விழலாகி நொந்தவரின் விதி மாற்றி விடும் ஸ்ரீ ஸாயிராம்
அழியாத நின் புகழ் கேடக இரு செவியினைக் காக்க
ஈஸ்வராம்பா ஈன்ற ஈசனவன் ஸ்ரீ ஸாயிராம்
ஈடில்லாது ஈந்து நாசியினைக் காக்க
நந்தா விளக்காம் எங்கள் ஸ்ரீ ஸாயிராம்
நல்லறம் தழைக்க வந்தவன் இரு கன்னமதைக் காக்க
பற்றில்லாப் பரமனவன் எங்கள் ஸ்ரீ ஸாயிராம்
பற்று வைத்தோரைப் பேணுபவன் பற்களைக் காக்க
ஆரவாரமற்ற அமைதி உருவம் ஸ்ரீ ஸாயிராம்
கோரிய வரமளித்து என் நாவினைக் காக்க ஒளிவீசக் காட்சி அளிப்பவன் ஸ்ரீ ஸாயிராம்
ஒழுக்க ஆட்சி புரியும் அவன் கழுத்தினைக் காக்க
நாளெல்லாம் பக்தரைச் சிந்தையில் நிறுத்தும் ஸ்ரீ ஸாயிராம்
வாழ்வெலாம் நயந்து எங்கள் இரு தோளினைக் காக்க
கற்பகச் சோலையின் கனி போலும் ஸ்ரீ ஸாயிராம்
பொற்கையினால் திருநீறு ஈந்து இரு கரமதைக் காக்க
வேத நாயகன் ஆதம் போதகன் ஸ்ரீ ஸாயிராம்
பேதமொழிந்து எம் முதுகினைக் காக்க
தஞ்சமடைவோரைத் தாங்கி அருளும் ஸ்ரீ ஸாயிராம்
வாஞ்சையுடன் விரைந்து வந்து நெஞ்சமதைக் காக்க
அறநெறி காட்டும் ஸ்ரீ ஸாயிராம்
மாறாத அன்புடன் மார்பகம் காக்க
ஏன் எவரென்று கேளாத ஸ்ரீ ஸாயிராம்
பரிவுடன் வந்தெமது இடையினைக் காக்க
கருணையின் கரையிலாக் கடல் ஸ்ரீ ஸாயிராம்
தருணத்தில் வந்தெமது இடையினைக் காக்க
பெற்றவர் தம் பெருமை சேர்க்கும் ஸ்ரீ ஸாயிராம்
கொற்றவன் நீ குறியதனைக் காக்க
இச்சா கிரியா ஞான சக்தியாம் ஸ்ரீ ஸாயிராம்
இதய நாயகன் இரு தொடையினைக் காக்க
கற்றவரும் வியந்து போற்றும் கவிதை தெய்வம் ஸ்ரீ ஸாயிராம்
முற்றாத அன்புடன் எங்கள் இரு பாதங்களைக் காக்க
சத்யதர்ம போதனைகளின் ஊட்டம் ஸ்ரீ ஸாயிராம்
அவை என் அங்கமெல்லாம் நிறைந்து காக்க
சாதகர் நினைவில் ஒளிர்பவன் ஸ்ரீ ஸாயிராம் - எம்
பேத மதியினைச் செம்மையுறக் காக்க
தஞ்சம் என்று வருவோரைத் தாங்கி அருளும் ஸ்ரீ ஸாயிராம்
வஞ்சகரின் அஞ்சுதலின்றும் எமைக் காக்க
சத்தியஸ்வரூபன் எங்கள் ஸ்ரீ ஸாயிராம்
சத்தியம் பிறழாமல் எமைக் காக்க
தர்மஸ்தாபகன் எங்கள் ஸ்ரீ ஸாயிராம்
தரம் தளராமல் எமைக் காக்க
சாந்தஜோதி எங்கள் ஸ்ரீ ஸாயிராம்
காந்தமாகி ஈர்த்து எமைக் காக்க
பிரேமஸாகரம் எங்கள் ஸ்ரீ ஸாயிராம்
பவ ஸாகரத்திலிருந்து எமைக் காக்க
பளபள என் மின்னும் குளிர்மணி விழியான் ஸ்ரீ ஸாயிராம்
மாளாத குஷ்டமதை மாய்த்துக் காக்க
வேதாகம மூல ஞான வித்தகன் ஸ்ரீ ஸாயிராம்
வாதம் வலிப்பு பித்தமதைப் போக்கிக் காக்க
செக்கச் சிவந்த பட்டுடையான் ஸ்ரீ ஸாயிராம்
சொக்குச் சிரங்கு குன்மமதைத் தகர்த்திக் காக்க
கலையனைத்தும் படைத்த ஞானப்பிரகாசன் ஸ்ரீ ஸாயிராம்
சூலை சயம் அகல அருள்வழி நோக்கிக் காக்க
மண்விண் ஊர்த்தி மீதும் நீரிலும் நெருப்பிலும் ஸ்ரீ ஸாயிராம்
கண் மலர் வீசி எவ்விடத்திலும் காக்க
நடக்கையில் கிடக்கையில் நவில்கையில் நிமிர்கையில்
நாடி வந்து ஓடி வந்து ஸாயிராம் காக்க
என் அப்பன் என் அன்னை ஸ்ரீ ஸாயிராம்
என்றென்றும் அகந்தன்னிலிருந்து காக்க
பக்த பராதீனன் எங்கள் ஸாயிராம்
முக்தி நமக்களித்து நன்மையுடன் காக்க
இசைப்பாட இன்குரல் ஈவாய் ஸத்யஸாயி
இனியகுணம் எமை அடையக் காவாய் ஸத்யஸாயி
தன்னலம் கருதா தகைமை ஈவாய் ஸத்யஸாயி
பிறநலம் பேணும் பெருமை தருவாய் ஸத்யஸாயி
இன்பதுன்ப சமநிலை இருக்கச் செய்வாய் ஸத்யஸாயி
ஈகை இரக்கம் இவையாவும் இங்கு தருவாய் ஸத்யஸாயி
நீ நான் என்ற இரண்டு ஆகாய் ஸத்யஸாயி
நான், நீ ஒன்றெனத் தோற்றுவாய் ஸத்ய ஸாயி
அன்றலர்ந்த அன்பு மலர் எங்கள் ஸாயி மன்னன்
என்றும் உலராத தம் மலரடி சேர்க்க!
சோதனைப் பல ஈந்தாலும் போதனையால்
வேதனை தீர்க்கும் ஸாயி எங்கள் பதியவன்
ஓம் ஓம் எனும் ஓங்காரத்தின் உறைவிடமே ஸத்யஸாயி
ஒரு நினைவாக நினை தியானிக்க ஸத்யஸாயி
நீங்காத பக்திதனை அருள ஸத்யஸாயி
நின் கமல் மலர்ப்பாதம் சரணம்
சரணம் சரணம் சத்ய ஸாயி
இதை நம்பிக்கையுடனும் சிரத்தையுடனும் படிக்க கஷ்டங்கள் விலகுகின்றன.
சர்வே ஜனானான் சுகினோ பவந்து சாயிராம்.

sai baba , sathya sai baba , baba ,kavasam 

No comments:

Post a Comment