SHIRDI LIVE DARSHAN

Wednesday 1 February 2012

தவம் செய்கையில் கவனச் சிதறல் ஏற்படுவது ஏன்?


தவம் செய்கையில் கவனச் சிதறல் ஏற்படுவது ஏன்? ~ குருவைத் தேடி



தவம் பற்றிய கேள்விகள் 
கண்ணை திறந்து செய்தால் கவனசிதறல் ஏற்படுகிறது (Concentration) செய்ய முடிய வில்லை அதனால்தான் கண்ணை மூடி செய்ய செய்கிறோம் என்று சொல்வது பற்றி?
இதற்க்கு முதல் காரணம் சித்தர்களும், ஞானிகளும் சொன்ன மெய்பொருள் பற்றி தெறியாமல் இருப்பதே காரணம். ஆம், திருவடி பற்றி தெறிந்திருந்தால்தானே கண் திறக்க வேண்டும் என்று தெறிந்திருக்கும்.
இரண்டாவது மெய்பொருள் பற்றி தெறிந்தும் சிலர் தக்க குருவை நாடி மெய்பொருளில் உணர்வை பெறாமல் இருப்பதுதான் காரணம்!
மனம் இல்லாமல் அழிப்பதுதான் தவத்தின் வேலை என்றாலும் எப்படிதான் மனம் அலை பாய்ந்தாலும் உங்கள் மெய்பொருளின் உணர்விலே நில்லுங்கள். அந்த உண்ர்விலே நிற்க நிற்க நம் கர்மாக்கள் தீயில் போட்டு கொளுத்தபடும். மனமும் அடங்கும்! இதுதான் மனம் அடங்க சிறந்த வழி! இதைத்தான் ஞானிகள் செய்தார்கள். மூட்டை மூட்டையாக சேர்த்து வைத்திருக்கும் கர்மாவை பொசுக்க பொசுக்கவே மனம் சிறிது சிறிதாக அடங்கும். மனம் அடங்க அடங்கவே கர்மாவும் சீக்கிரம் இல்லாமல் ஆக்கப்படும். அதுதான் இந்த தவம்.
இதை விட்டு விட்டு எனக்கு கவனம் சிதறுகிறது என்று நீங்கள் கவலை பட்டு வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை. அப்படி செய்தால் உங்கள் வினைதான் மீண்டும் கூடி போகும்! ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர் வினை உண்டு என்பதை நினைவில் நிறுத்தி கொள்ளுங்கள். உங்கள் மெய்பொருளில் உள்ள உண்ர்வுடன் புணர்ந்து சும்மா இருங்கள். எல்லா ஞானிகளும் இப்படித்தான் சும்மா இருந்தார்கள்!
இதைத்தான் வள்ளல் பெருமான் சொன்னார்
ஒருமையுடன் உனது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்
நாம் ஒருமையுடன் மலரடியை நினைக்க வேண்டும்.. இப்படி நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து சும்மா இருந்தால் போதும். எல்லாம் செயல் கூடும்!
சும்மா இருப்போம் சுகமாய் வாழ்வோம்!

No comments:

Post a Comment